எங்களை பற்றி:
YES: Youlead Entrepreneur Service
YES. Youlead தொழில்முனைவு வழிகாட்டல் சேவை என்பது உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு கூட்டுப்பணியாகும். இலங்கை முழுவதிலும் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு இலவசமாக நிபுணர்களிடமிருந்து வழிகாட்டல்களை வழங்குவதற்கும், அவர்களின் வணிக வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

YouLead

YouLead என்பது 18 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டமாகும், இது அமெரிக்க அரசாங்கத்தின் மேம்பாட்டு நிறுவனம், USAID, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி, SDC ஆல் ஆதரிக்கப்படுகிறது மற்றும் IESC ஆல் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துதல், அதிக திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குதல் மற்றும் இளைஞர்களை அதிக உற்பத்தித் தொழிலுடன் இணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் அறிய

Sasnaka
Sansanda

Sasnaka Sansanda 1997 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டதாரிகளாக இருந்த இளம் தன்னார்வத் தொண்டர்களால் அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து  Sasnaka Sansanda பல சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், தொழில்முறை அமைப்புகள் உட்பட ஒரே எண்ணத்தைப் பகிர்ந்துளொள்ளும் நலன் விரும்பிகளின் ஈடுபாட்டுடன். தற்போது, ​​தொழில்முனைவோர் மேம்பாடுஇ STEM கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேவை நாடும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் ஆகிய துறைகளில் 20 க்கும் மேற்பட்ட திட்டங்களை Sasnaka Sansanda செயல்படுத்துகிறது. Sasnaka 25 மாவட்டங்களையும் மற்றும் அனைத்து இன சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்  நாடுமுழுவதும் உள்ள 500 க்கும் அதிகமான தன்னார்வலர்களின் ஆதரவுடன் இயங்குகின்றது. நேரடி மற்றும் மறைமுக பயனாளிகள் 50இ000க்கும் அதிகமான தனிநபர்கள் உள்ளனர்.

மேலும் அறி

ஒத்துழைப்பு வழங்கினோர்: